சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு ஆண் எப்படியிருக்க வேண்டும்?

vidhai2virutcham-விதை2விருட்சம்

சாமுத்திரிகா லட்சணப்படிஎல்லா ஆண்களுக்கும்  எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் அவனை விட அதிர்ஷடசாலி வேறு யாருமல்ல. ஒரு இளம் ஆணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம். ஏற்கனவே சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்? என்பதை பார்த்தோம் இப்போது, சாமுத்திரிகா லட்சணப்படி ஓர் ஆண் எப்ப‍டியிருக்க‍

View original post 517 more words

Advertisements

அனுமானின் பாதசுவடு நெடுந்தீவில் கண்டுபிடிப்பு

எரிமலை

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில்

மனித பாத சுவட்டினை ஒத்தமாதிரியான
கற்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் 40 அடி மனிதனின் பாதச்
சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப்
பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட
பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும் வரலாற்று ரீதியிலும்
பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுவதாக
நெடுந்தீவு பிரதேச செயலாளர்
ஆழ்வார்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார். பாறைகள் சிதைவடைந்து இந்த
சுவடு உருவானதாக தெரிவிக்கப்படுகின்றது. 40 அடி மனிதன் ஒருவன் காலை வைத்ததால்
உருவானதாகவும் இராமாயணப் போர்
நடைபெற்றபோது அனுமான் மலையைத்
தூக்கிக்கொண்டு வரும் போது அவர் வைத்த பாதச்சுவடு என்றும் பல்வேறு கதைகள் இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

View original post

உடல் எடை குறைக்கனுமா.. முதல்ல இதை தெரிஞ்சிக்கங்க..!

எரிமலை

காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். 

குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது. 

உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள் பெட்டர். 

முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. 

பழ வகைகளில் மா, பலா, வாழை, சப்போட்டா ஆகிவற்றைத் தவிர்த்து, மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச் சாப்பிடலாம். 

அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணெயில் பொரிக்காமல், குழம்புவைத்து சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். 

குழந்தைகள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். 

பெரியவர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய வேண்டும். 

குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்ற கூட்டு வேலைகளில் ஈடுபடலாம். 

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள் பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரையின்…

View original post 80 more words