அனுமானின் பாதசுவடு நெடுந்தீவில் கண்டுபிடிப்பு

எரிமலை

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில்

மனித பாத சுவட்டினை ஒத்தமாதிரியான
கற்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் 40 அடி மனிதனின் பாதச்
சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப்
பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட
பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும் வரலாற்று ரீதியிலும்
பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுவதாக
நெடுந்தீவு பிரதேச செயலாளர்
ஆழ்வார்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார். பாறைகள் சிதைவடைந்து இந்த
சுவடு உருவானதாக தெரிவிக்கப்படுகின்றது. 40 அடி மனிதன் ஒருவன் காலை வைத்ததால்
உருவானதாகவும் இராமாயணப் போர்
நடைபெற்றபோது அனுமான் மலையைத்
தூக்கிக்கொண்டு வரும் போது அவர் வைத்த பாதச்சுவடு என்றும் பல்வேறு கதைகள் இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

View original post

உடல் எடை குறைக்கனுமா.. முதல்ல இதை தெரிஞ்சிக்கங்க..!

எரிமலை

காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். 

குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது. 

உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள் பெட்டர். 

முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. 

பழ வகைகளில் மா, பலா, வாழை, சப்போட்டா ஆகிவற்றைத் தவிர்த்து, மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச் சாப்பிடலாம். 

அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணெயில் பொரிக்காமல், குழம்புவைத்து சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். 

குழந்தைகள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். 

பெரியவர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய வேண்டும். 

குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்ற கூட்டு வேலைகளில் ஈடுபடலாம். 

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள் பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரையின்…

View original post 80 more words

ஒரு குட்டிக் கதை [ இறைவன் நினைத்தால் ]

chinnuadhithya

download (5)
மதுர்பாபு என்பவர் பகவான் ராமகிருஷ்ணரிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவ்வப்போது ராமகிருஷ்ணரிடம் வாதமும் புரிவார். ஒரு நாள் ” இறைவன் ஏற்படுத்திய நியதிக்கு அவனும் கட்டுப்பட்டவந்தான்  இயற்கையின் நியதியை அதனைப் படைத்த இறைவனாலும் மீற முடியாது” என்று வாதம் செய்தார். ஆனால் ராமகிருஷ்ணர் அதை மறுத்தார். இறைவன் விரும்பினால் இயற்கையின் நியதியை மாற்றி அமைக்க முடியும் என்றார்.download
” நீங்கள் கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. சிவப்பு மலர் பூக்கும் செடியில் அந்தப்பூதான் மலரும். இயற்கைக்கு மாறாக வெள்ளைப்பூ மலருமா? என்ன? ” என்றார்.  இறைவனுக்கு விருப்பம் என்றால் எதுவும் செய்வான். இதையும் செய்வான் என்றார் ராமகிருஷ்ணர். ஆனால் கடைசிவரை ராமகிருஷ்ணரின் வாதத்தை மதுர்பாபு ஒப்புக்கொள்ளவில்லை.download (1)
மறுநாள் காலை அந்தப் பகுதியில் இருந்த தோப்பு வழியாக ராமகிருஷ்ணர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிவப்பு செம்பருத்திச் செடியின் கிளை ஒன்றில் சிறிது புள்ளிகூட இல்லாத வெள்ளை நிற செம்பருத்திப் பூ ஒன்று பூத்திருப்பதைக் கண்டார். அந்தக் கிளையை அப்படியே எடுத்துக் கொண்டு வந்து மதுர்பாபுவிடம் காட்டினார் ராமகிருஷ்ணர். அதைக் கண்டதும் அவரது காலில் விழுந்தார் மதுர்பாபு  ராமகிருஷன்ர் மிகப்பெரிய மகான் என்பதை புரிந்து கொண்டார்.

View original post

ரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்…!

எதாவது செய்யணும்

ரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடிவீடு கட்டலாம். ஏதோ ரியல் எஸ்டேட் விளம்பரம் என்று நினைக்க வேண்டாம். குறைந்த செலவில், நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத ஒரு பிளாட்டை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கியிருக்கின்றனர், சென்னை ஐ.ஐ.டி., பொறியியல் துறையினர்.
 
அப்படி இந்த கட்டடத்தில் என்னதான் சிறப்பும் வித்தியாசமும் என்கிறீர்களா? இதன் மூலப் பொருட்கள் தான். முற்றிலும் வித்தியாசமான இதன் மூலப்பொருள் குறித்து பார்ப்போம்… 
 
ஜிஎப்ஆர்ஜி என்றால் என்ன? 
 
உரத் தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள், கண்ணாடி இழைகள் மற்றும் ஜிப்சம் உப்பு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில் தயாரிக்கப்பட்ட (கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்) ஜிஎப்ஆர்ஜி பலகைகள்,  இவற்றோடு குறைந்த அளவு சிமென்ட் மற்றும் மிகக் குறைந்த அளவு இரும்புக் கம்பிகள் இவற்றை வைத்து தான் ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் துறையினர் இந்த மாதிரி வீட்டை அமைத்துள்ளனர். 
 
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 1981 சதுர அடி அளவில் இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த மாதிரி வீட்டைக் கட்ட தேவைப்பட்ட கால அவகாசம் வெறும் ஒரு மாதம் தான். சொந்த வீடு என்பது கனவாகவே போய் விடுமா என்ற ஏக்கத்தில் இருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு  இந்த புதிய தொழில் நுட்பம் நிச்சயம் பயன்படும் என்கின்றனர் பொறியாளர்கள்.
 
பரீட்சார்த்த முறையில் ஐ.ஐ.டி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாதிரி வீட்டை, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் சமீபத்தில் திறந்து வைத்தார். 
 
 
ஐ.ஐ.டி,யின் இயக்குனர்…

View original post 430 more words